Tuesday, September 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்தது

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்தது

இவ்ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், செப்டம்பர் 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 74,637 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாண்டில் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 155,798 பேரும், சீனாவிலிருந்து 105,294 பேரும், ஜெர்மனியிலிருந்து 94,007 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதற்கமைய இந்தியாவிலிருந்து 22,541 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments