2027ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2026 ஜூன் 30ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வரவு-செலவுத் திட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், சட்டவரைஞர் திணைக்களத்தினால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த அமைச்சரவைப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


