Saturday, October 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்ஹல மாவத்தையில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர், ஹோமாகம பிராந்திய குற்றவியல் விசாரணை பணியகத்தால் நேற்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 4ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், குறித்த வீட்டில் தங்கியிருந்த 74 வயதுடைய நபர் மீது கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஹோமாகம பிராந்திய குற்றவியல் விசாரணை பணியகத்தின் அதிகாரிகள், நேற்று பிற்பகல் மாகும்புர சுதந்திர மாவத்தைக்குத் திரும்பும் சந்திக்கு அருகில் வைத்து இந்தச் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் கொடகம, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், அவரே இந்தக் கொலையைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் தற்போது மேல் மாகாணத்தின் தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments