Sunday, November 1, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிராக மொன்றியலில் போராட்டம்!

பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு எதிராக மொன்றியலில் போராட்டம்!

நேற்று மொன்றியலின் Guy-Favreau Complex பகுதியில் அமைந்துள்ள Health Canada அலுவலகங்களுக்கு முன்னால் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Halloween உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்ற போராட்டக்காரர்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டும் வகையில் தரையில் படுத்து அடையாளப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கனடாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்ட சில பூச்சிக்கொல்லி மருந்துகளை மீண்டும் அங்கீகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் Bill C-31 தொடர்பான முன்மொழிவுகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மொன்றியல் மட்டுமன்றி Quebec City, Ottawa உள்ளிட்ட பல நகரங்களிலும் இதேபோன்ற போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments