Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்புத்தளம் - திருகோணமலை வீதியில் விபத்து ; முதியவர் பலி!

புத்தளம் – திருகோணமலை வீதியில் விபத்து ; முதியவர் பலி!

புத்தளம் – திருகோணமலை வீதியில் 56ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நொச்சியாகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முதியவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அநுராதபுரம் – நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments