Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப்படலாம் – நடிகர் பார்த்திபன்

பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப்படலாம் – நடிகர் பார்த்திபன்

இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இருநாடுகளும் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாக்கி இல்லாமல் பாக்கிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் -இந்தியாவின் பழிக்குப் பழி படலத்தில் பதுங்குக் குழியில் பாக். பிரதமர் ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல். போர் முறையுடன் அணுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது அதை நம் வான்வெளி அதிரடி ஆம்! எஸ் -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது. ஆயினும் ஆயினும்

உலக நாடுகள் ஒன்றிணைந்து பாக். அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments