Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கிட்டு பூங்காவில் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நல்லூர் கிட்டு பூங்காவில் போராட்டம்

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் “விடுதலை” எனும் தொனிப்பொருளிலான போராட்டம் இன்று வியாழக்கிழமை (24) நல்லூர் கிட்டு பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் சிறைவாழ்க்கை கண்காட்சி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாட்டப்படவுள்ள “விடுதலை விருட்சத்துக்கான ” விடுதலை நீர் சேகரிப்பும் இடம்பெற்றது.

இதில் தமிழ் அரசியல் கைதியாக 15 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி விவேகாநந்தனூர் சதீஸ் எழுதிய “துருவேறும் கைவிலங்கு” நூல் அறிமுகமும் இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவும் தயாரித்து வழங்கப்பட்டது.

இன்றைய தினம் ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நாளையும் தொடரவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments