Sunday, June 7, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை

ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை

பிரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் எம்.ஷோபனா ராணி தயாரிக்கும் படம் ஒர்க்கர். ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நனையா, நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசிலயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வினய் கிருஷ்ணா இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறும்போது “உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்களால் “ஒர்க்கர்” திரைப்படம் நிறைந்திருக்கும். புதுச்சேரியில் இதன் படப்பிடிப்புகள் நடக்கிறது” என்றார்.

இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும ரீஷ்மா நனையா கன்னடத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. ‘ஏக் லவ் யா’ என்ற படத்தில் அறிமுகமாகி ராணா, ஸ்பூக்கி காலேஜ், வாமனா, கேடி தி டெவில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘ஒர்க்கர்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments