Monday, September 21, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சிரியா: ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து

சிரியா: ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள இராணுவப் படைத்தளத்தில் இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

மத்தியகிழக்கு நாடான சிரியாவில் 2011 முதல் 2024 வரை நீடித்த உள்நாட்டுப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான ஆயுதங்களும் வெடிபொருட்களும் நாட்டின் பல்வேறு படைத்தளக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஆயுதக் கிடங்குகளில் அவ்வப்போது வெடிவிபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, வடக்கு சிரியாவின் அல்-இஸ் (Al-Eiss) பகுதியில் அமைந்துள்ள இராணுவப் படைத்தள ஆயுதக் கிடங்கில் இன்று திடீரெனப் பாரிய வெடிவிபத்து சம்பவித்தது. இதில் காயமடைந்த நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments