Tuesday, September 22, 2026
spot_img
Homeபொது செய்திகள்மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்

மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்

மனச்சோர்வு அறிகுறிகளைக் குறைப்பதற்கான புதிய ‘Brain Stimulation Headset’ சாதனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த ‘Flow Neuroscience’ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் சாதனம், நெற்றியில் அணிந்து சுமார் 30 நிமிடங்கள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சாதனத்தின் மூலம் 10 வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான கட்டணம் 2,200 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

174 பேரை உள்ளடக்கிய ஆய்வில், இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி 10 வார சிகிச்சையை மேற்கொண்டவர்களில் 45 சதவீதம் பேருக்கு மனச்சோர்வு அறிகுறிகளில் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அங்கீகாரம் பெற்றுள்ள இந்தச் சாதனத்தை, மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments