சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான மரதன் போட்டியில், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் போக்குவரத்துப் பொலிஸாராகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
‘ஹாங்சிங் நம்பர் 2’ எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோக்கள், ஹுவாங்லோங் விளையாட்டு மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டன.
மேலும், ரோந்துப் பணிகளை மேற்கொள்வது, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுப்பது மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது உள்ளிட்ட பணிகளையும் இவை முன்னெடுத்துள்ளன.
மரதன் போட்டியின் போக்குவரத்து முகாமைத்துவப் பணிகளில் மனித உருவ ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டமை பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது


