Friday, November 20, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சவூதி,பஹ்ரைனில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சவூதி,பஹ்ரைனில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒக்டோபர் மாத இறுதியில், இந்த இரு நாடுகளிலும் உள்ள அமெரிக்கர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று சவூதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, பஹ்ரைன் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்குதலுக்கு உள்ளானதாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது.

​இதையடுத்து, சவூதி மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகியவை, ஈரான் மற்றும் யேமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.​

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments