சவூதி அரேபியா, கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி இயக்கம் நடத்திய தாக்குதலில் ஒரு அமெரிக்கர், எகிப்தியர், ஜோர்தானியர், சிரியர், பலஸ்தீனர் மற்றும் சூடானியர் உட்பட பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 309 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சவூதி அரேபியாவின் கூட்டுப் படைகளின் அறிக்கையின்படி, கூட்டுப் படைகள் இந்தத் தாக்குதலுக்கு “தீவிரமாக” பதிலடி கொடுக்கும். ஹவுதிகளின் அதிகார மையமான ஏமனின் சனா மீது சவூதி வான்வழித் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


