Tuesday, September 22, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிண்ணியாவில் திடீர் சுற்றிவளைப்பு: 08 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

கிண்ணியாவில் திடீர் சுற்றிவளைப்பு: 08 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (20) மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் 08 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தலைக்கவசம் அணியாமை, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி W.A.K. சுகத் சந்தனவின் நேரடி வழிகாட்டலின் கீழ், பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொறுப்பதிகாரி ஏ.எம். முஸம்மில் தலைமையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் ஈடுபட்டனர்.

கைப்பற்றப்பட்ட 08 மோட்டார் சைக்கிள்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்திலும் இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments