Tuesday, March 17, 2026
spot_img
Homeபொது செய்திகள்ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு

குமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார்.

பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் மூங்கில்விளை பகுதியில் சென்றபோது, மேரி ஏஞ்சல் தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கூறினார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதைதொடர்ந்து பஸ் முழுவதும் மேரி ஏஞ்சல் தேடிப்பார்த்தார். ஆனாலும், நகை கிடைக்கவில்லை. பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி மேரி ஏஞ்சலிடம் நகை அபேஸ் செய்துவட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மேரி ஏஞ்சல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments