Monday, June 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு

உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு

உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 172வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, இன்று முதல் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது. அதேவேளை, போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைனுக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். மிகவும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். பிரச்சினைக்கான காரணங்களை நீக்கவும், அமைதியை நோக்கி செல்வதற்கான வழிமுறைகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். 15ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments