Sunday, October 4, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி - இலஞ்சம் பெற்றவர் கைது

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி – இலஞ்சம் பெற்றவர் கைது

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து 12 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்டவர் என்றும், முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முறைப்பாட்டாளரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் அவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கும் சந்தேகநபர் அழைத்துச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் ஹுல்ஃப்ட்ஸ்டார்ப் இலக்கம் 5 நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டபோது, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில் அலுவலக உதவியாளர்களை நியமிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி நீண்டகாலமாக இதேபோன்ற மோசடி நடவடிக்கைகளில் சந்தேகநபர் ஈடுபட்டு வந்ததாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments