இலங்கையில் இன்று தங்க விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமையுடன் (13) ஒப்பிடுகையில் இன்று(15) தங்கவிலை பாரிய அதிகரிப்பை பதிவு பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று 6,000 ரூபாயால் அதிகரித்து 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 4,000 ரூபாயால் அதிகரித்து 360,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படிஇ 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,075 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


