Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய அணி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, பிகாா் மாநிலம் ராஜ்கிா் நகரில் வரும் 27-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், சீன தைபே, கஜகஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த ஆண்டு இதே ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கருத்தில் கொண்டு, பிரதான வீரா்கள் பெரும்பாலும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனா். அதுதவிர, ஆஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடிய ரஜிந்தா் சிங், ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் ஆகியோா் இந்த அணியில் இடம் பிடித்தனா்.

தமிழகத்தின் காா்த்தி செல்வம் உள்பட இருவா் மாற்று வீரா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பாக இருப்பதால், ஆசிய கோப்பை போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments