Sunday, October 25, 2026
spot_img
Homeஉலக செய்திகள்Bukangi சுறாவை பார்க்கப் படையெடுத்த மக்கள்!

Bukangi சுறாவை பார்க்கப் படையெடுத்த மக்கள்!

தென்கொரியாவின் பரபரப்பான துறைமுக நகரமான புசானில் (Busan) உள்ள ஆழமற்ற கால்வாய் ஒன்றில் பெரிய சுறா ஒன்று புகுந்தது.

இதை மீட்பதற்காக அந்த நாட்டின் முன்னணி கடல்சார் உயிரியலாளர் கிம் ஹியூன்-வூ (Kim Hyun-woo) தலைமையிலான குழுவினர் விரைந்தனர்.

ஆய்வில் அது மனிதர்களுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தாத பெண் ‘டஸ்கி சுறா’ (dusky shark) என்பது தெரியவந்தது.

கடலோரக் காவல்படையினர் மின்சாரத் தடுப்புக் கருவியைப் பயன்படுத்தி அதை வெளியேற்ற முயன்ற போதிலும், சுறா பெரியதாகவும் வேகமாகவும் இருந்ததால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இதற்கிடையே, நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து, சுறாவைப் பார்க்கப் பெருந்திரளான மக்கள் அங்கு குவிந்தனர்.

அந்தச் சுறாவுக்குச் செல்லமாக “பூகங்கி” (Bukangi) எனப் பெயரிட்ட ரசிகர்கள், இது அருகில் உள்ள துறைமுகத்தின் கொரியப் பெயரான “புக் ஹாங்” என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments