Friday, June 26, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அஸ்வெசும இனி யாருக்கு கிடைக்கும்?

அஸ்வெசும இனி யாருக்கு கிடைக்கும்?

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில், 4 பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் மக்கள் குறித்த உதவித்தொகையை பெற்றனர்.

மேலும், ஏப்ரல் 2025 இல், நான்காவது பிரிவான இடைக்காலப் பிரிவில் இருந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், மூன்றாவது பிரிவான நலிவடைந்த மக்களில் 425,000 பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 பிரிவுகளில் உள்ள ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மீண்டும் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகையை பெற முடியும் என்று நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments