Monday, July 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரை வௌியிடப்படவில்லை.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை ஒரு கொடூரமான வன்முறைச் செயல் என வன்மையாகக் கண்டித்துள்ள மேயர் வில்சன், தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து செயற்பட்டு இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்த சியாட்டில் பொலிஸ் அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது வாழ்வின் மிக மோசமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கலாச்சாரம், பிணைப்பு மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒரு ஒன்றுகூடல் எவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது என்பதைப் புரிந்து கொள்ள முழுச் சமூகமும் தவிக்கிறது.

உயிரிழந்தவர்கள், மீண்டுவரப் போராடுபவர்கள் மற்றும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் குடும்பத்தினர் மீதே இன்றிரவு எமது கவனம் முழுமையாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments