Monday, August 31, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அடையாளமே தெரியாத வகையில் சிதைந்த மனிதத் தலை

அடையாளமே தெரியாத வகையில் சிதைந்த மனிதத் தலை

கொழும்பு – மொரட்டுமுல்ல, இஹல இண்டிபெத்த பகுதியில் மனிதத் தலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டகை ஒன்றின் உரிமையாளர் 119 என்ற அவசர எண்ணுக்கு அழைப்பு ஏற்படுத்தி மொரட்டுமுல்ல பொலிஸாருக்கு இன்று (30) காலை சுமார் 8 மணியளவில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

மொரட்டுமுல்ல பொலிஸ், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, உடலிலிருந்து அகற்றப்பட்ட மனித தலையொன்று, கடற்கரையோரம் ஒரு கொட்டகைக்குப் பின்னால் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுமுல்ல பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சட்டத்தரணி சந்தமாலி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மனிதத் தலை மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதாகவும், விலங்குகளால் குறித்த தலை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மொரட்டுமுல்ல பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments