திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் தாயிப் நகர் – கோயிலடி வைத்தியசாலை – வெட்டாத்து பால வீதி நீண்ட காலத்திற்குப் பின்னர் புனரமைக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இந்த வீதி, ஒவ்வொரு மழைக்காலத்திலும் கடுமையாக சேதமடைந்து, பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீதியின் மோசமான நிலை தொடர்பில் ஊடகங்களிலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச். தாலிப் அலி மேற்கொண்ட முயற்சியின் பயனாக, வீதி புனரமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி அப்பகுதி மக்களுக்கு வைத்தியசாலைக்கு செல்வதற்கும், மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதற்கும் முக்கியமான போக்குவரத்து பாதையாக காணப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் வி. விஜயகுமார், பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட இந்த வீதி, தவிசாளர் உள்ளிட்ட அனைவரினதும் ஒத்துழைப்புடன் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


