Monday, August 31, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (30) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொணராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பகல் வேளையில், வெப்பச் சுட்டெண், (மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை) ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொணராகலை, அம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments