Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு:

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இலக்காகக் கொண்டு விசேட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் விசேடமாக 2,500க்கும் மேற்பட்ட மேலதிக காவல்படையினர் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பண்டிகைக் காலம் நெருங்குவதைத் தொடர்ந்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் காவல்துறை மா அதிபர் ஒரு விசேட செய்தியை வழங்கியுள்ளார்.

அதன்படி, நகரங்களின் பாதுகாப்பு, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு, அத்துடன் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் 2,500 பேரைக் கொண்ட மேலதிக படையணி இந்த அனைத்து நடவடிக்கைகளுக்காகவும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த பண்டிகைக் காலத்தில் சிவில் உடையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் பலர் உங்கள் உதவிக்கும் பாதுகாப்புக்கும் உள்ளனர்.

மேலும், புலனாய்வு அதிகாரிகளும் இலங்கை காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் தயாராக உள்ளனர்.

பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

நீங்கள் உங்கள் சிற்றூந்து அல்லது உந்துருளிகளை ஏதேனும் ஒரு இடத்தில் நிறுத்தும் போது, அது குறித்து கவனம் செலுத்தவும்.

உங்கள் வாகனத்தில் பெறுமதியான பொருட்கள் அல்லது பணத்தை விட்டுச் செல்ல வேண்டாம்.

உங்களுக்கு யார குறித்து சந்தேகம் ஏற்பட்டால், அருகில் உள்ள காவல்துறை அதிகாரிக்கு உடனடியாகத் தெரிவிக்கவும்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments