Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியாளர்கள் கைது

கிளிநொச்சியில் கசிப்பு உற்பத்தியாளர்கள் கைது

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலி காட்டில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையினர் இருவரை தாக்கி விட்டு தப்பியோட முற்பட்ட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான இரண்டு அதிரடிப்படை வீரர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் சாகர குலசேகர உள்ளிட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments