ஹப்புத்தளை கஹகல்ல பகுதியில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்தது வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 7 வயது சிறுவன், 12 வயதுடைய சிறுமி மற்றும் அவரது தாய் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவல்துறை, இராணுவ விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொது மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் கஹகல்ல தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


