Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தெற்கு அதிவேக வீதியில் விபத்து

தெற்கு அதிவேக வீதியில் விபத்து

தெற்கு அதிவேக வீதியில் 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதிக்கு அருகில், வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வேன் ஒன்று முன்னால் சென்ற சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (15) மாலை 4 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தின் போது லொறியின் ஒரு பாகம் உடைந்து அதிவேக வீதியின் வெளியே வீசப்பட்டுள்ளது காயமடைந்தவர்கள் தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த நோயாளர் காவு வண்டி மூலம் தங்காலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments