Thursday, January 9, 2025
spot_img
Homeபொது செய்திகள்பழைய இரும்பு கடையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி

பழைய இரும்பு கடையில் பயங்கர வெடி விபத்து – ஒருவர் பலி

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் சிந்தி பகுதியில் பழைய இரும்பு கடை உள்ளது. இந்த கடையில் விற்பனைக்கு வந்த பழைய பஸ்சை உடைக்கும் பணியில் 2 பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

கியாஸ் கட்டர் எந்திரம் மூலம் பழையை பஸ்சை உடைத்துக்கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் டீசல் டாங்கரில் தீ பற்றியது. இதனால், டீசல் டேங்கர் வெடித்து சிதறியது. இந்த கோர வெடி விபத்தில் பஸ்சை ஒடைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments