Monday, March 16, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவிற்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதமர்

கனடாவிற்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதமர்

இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவிற்கு விஜயம் செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் பதவியையும் வகிக்கும் ஹரிணி அமரசூரிய, தெற்காசிய பிராந்திய பிரதிநிதியாக பொதுநலவாய கற்றல் அமைப்பின் Commonwealth of Learning (COL) நிர்வாக சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கனடா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த மாநாடு ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற உள்ளது.

இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் பயிற்சி, உயர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, முழுநாள் கல்வி, மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்பாடான கற்றலை ஊக்குவித்தல் போன்ற முக்கிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

மேலும், புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு, நிறுவனங்களின் டிஜிட்டல் மாற்றத்துக்கு ஆதரவு, திறன் வாய்ந்த கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள், மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தல் ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments