தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் மறு வெளியீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படம் மற்றும் 2005-ம் ஆண்டில் விஜய், அசின் நடிப்பில் வெளியான சிவகாசி ஆகிய படங்கள் மறு வெளியீடு செய்ய உள்ளதாக படத்தில் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். இவர் தயாரிப்பில் கடந்த ஆண்டு மறு வெளியீடு செய்யப்பட்ட கில்லி திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. மறு வெளியீடு செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த தமிழ்நாட்டின் முதல் படம் என்ற சாதனையை கில்லி படைத்தது. இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து மறு வெளியீடு ஆகும் விஜய் படங்கள்
RELATED ARTICLES
Recent Comments
on Hello world!


