Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சண்முக பாண்டியன் நடித்த `படை தலைவன்’ பட வெளியீடு ஒத்திவைப்பு

சண்முக பாண்டியன் நடித்த `படை தலைவன்’ பட வெளியீடு ஒத்திவைப்பு

மறைந்த விஜய்காந்தின் மகனாவார் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். “வால்டர்”, “ரேக்ளா” படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிரைக்கடர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் லிரிக் வீடியோ சிலமாதங்களுக்கு முன் வெளியானது மற்றும் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்கு ஒதுகீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். படத்தின் புதிய வெளியீடு தேதியை விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments