பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் தற்போது தன் கைவசத்தில் “நூறு கோடி வானவில், அந்தகாரம், டீசல்” ஆகிய படங்களை வைத்துள்ளார். அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் தனது 15-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் சிம்புவும் மேடையில் இருந்தார். அவர்களிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், ‘சிம்பு – ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா? அதுவும் அண்ணன் தம்பியாக நடிப்பீர்களா? என கேட்டனர். இதற்கு பதிலளித்த சிம்பு, அதற்கான ஒரு நல்ல கதை கிடைத்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்பேன் என தெரிவித்தார். இதனையடுத்து பேசிய ஹரிஷ் கல்யாண், சிம்பு சார் அந்த படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும். அவரது இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என பதிலளித்தார்.
சிம்பு இயக்கத்தில் நடிக்க ஆசை – நடிகர் ஹரிஷ் கல்யாண்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on