தற்போதைய சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் மே 13ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், சுப்ரீம்கோர்டின் 52வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் பதவியேற்கிறார்.
முன்னதாக புதிய தலைமை நீதிபதியாக கவாயை நியமிக்க மத்திய அரசுக்குத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்தார். இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் மே 14ம் தேதி பதவியேற்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.