Saturday, April 19, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியால் மு.க.ஸ்டாலின் பீதியின் உச்சத்தில் உள்ளார் – எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியால் மு.க.ஸ்டாலின் பீதியின் உச்சத்தில் உள்ளார் – எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க. தலைவரும், விடியா தி.மு.க. அரசின் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை தி.மு.க. பொதுக்குழுவில் சொன்னார். நேற்று அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அ.இ.அ.தி.மு.க.-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்! பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் தள பதிவு வாயிலாக தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான “குறைந்தபட்ச செயல் திட்டம்” இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் அறிவித்திருந்தார். “என்னவா இருக்கும்?” என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார். மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? நீட் என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?”- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்! மு.க.ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! அ.தி.மு.க. ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்! காவேரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்! தமிழ்நாடு விரோத தி.மு.க.வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments