Friday, April 18, 2025
spot_img
Homeகனடா செய்திகள்அமெரிக்கா என்ற பெயரிலிருந்த வீதியின் பெயர் மாற்றம்

அமெரிக்கா என்ற பெயரிலிருந்த வீதியின் பெயர் மாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட வரி நடவடிக்கைகள், கனடாவுக்கு எதிரான போக்கை எடுத்துள்ளதோடு, அது முழு நாட்டிலும் தேசியவாத கொள்கைகளை வலுப்பெறச் செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில், வான் நகரம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அந்த நகரின் – “அமெரிக்கா அவன்யூ”என்ற வீதியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வான் நகர மேயர் ஸ்டீவன் டெல் டூகா, பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில், இந்த வீதியின் பெயரை “Terry Fox Avenue” என மாற்றும் தீர்மானத்தை முன்வைத்துள்ளார்.

நம்மை பிரதிபலிக்கும் ஒரு கனடிய வீரரின் பெயரை இந்த வீதிக்கு வழங்க வேண்டும் என கருதினோம்,” என்று மேயர் டெல் டூகா கூறியுள்ளார்.

“அமெரிக்கா அவன்யூ” என்பது Jane Street மற்றும் John Deisman Boulevard இடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய வீதியாகும்.

டெரி ஃபாக்ஸ், ஓர் அறியப்படும் கனடிய பிரபலமாவார், இவர் புற்றுநோய் ஆராய்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெரி ஃபாக்ஸ், கனடாவின் பெருமைமிக்க தேசிய பிரபலங்களில் ஒருவர். அவரது தைரியம் மற்றும் தன்னலமற்ற உழைப்பு கோடிக்கணக்கான கனடாவாசிகளுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments