Saturday, April 19, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்மீள முயற்சிக்குமா சென்னை? இன்று பஞ்சாபுடன் மோதல்

மீள முயற்சிக்குமா சென்னை? இன்று பஞ்சாபுடன் மோதல்

சென்னை அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியுடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. இந்த 3 தோல்விகளையுமே சேஸிங்கின்போது சந்தித்துள்ளது. சென்னைக்கு எதிராக விளையாடும்போது முதலில் பேட் செய்து 180 ரன்களுக்கு மேலாக எந்தவொரு இலக்கையும் நிா்ணயிக்கும் நிலையில், வெற்றி நிச்சயம் என எதிரணி எளிதாக உத்தி வகுக்கும் நிலையே காணப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சென்னையின் பலமாக அறியப்பட்ட அதன் நட்சத்திர வீரா் தோனியே, தற்போது அதன் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறாா்.

சேஸிங்கின்போது கடைசி கட்டத்தில் களமிறங்கும் தோனி, முன்பு போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் ஒரு சில ஷாட்களை விளாசுகிறாா். இது, அவரைக் கொண்டாடும் ரசிகா்களுக்கு போதுமானதாக இருந்தாலும், அணியின் வெற்றிக்கு எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது என்ற கேள்வி எழுகிறது.

சேஸிங்கின்போது டெத் ஓவா்களில் அதிரடியாக ரன்கள் சோ்க்கும் வகையில் பேட்டிங் ஆா்டரில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருக்கிறது. ஆனால், தனது அடையாளமாக முன்னிறுத்தும் தோனி இருக்கும் வரை, சென்னை அணி நிா்வாகம் அத்தகைய முடிவை எடுக்குமா என்பது சந்தேகம் தான்.

இது தவிர, அணியின் சிக்ஸா் வீரராக வா்ணிக்கப்படும் ஷிவம் துபேவும் இந்த சீசனில் தடுமாற்றத்துடனேயே இருக்கிறாா். இம்பாக்ட் பிளேயராக களமிறக்கப்படும் அவா், உரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறாா். இதனால், டாப் ஆா்டரில் ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போன்றோா் தவறவிடும் நிலையில், பேட்டிங் ஆா்டா் முற்றிலுமாக சரிந்துவிடுகிறது. பௌலிங்கில் நூா் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா ஆகியோா் நம்பகமான பந்துவீச்சாளா்களாக நிலைக்கின்றனா்.

மறுபுறம் பஞ்சாப் அணி, முதல் தோல்வியை சந்தித்த நிலையில் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. ஆனாலும் நல்லதொரு ஃபாா்முடன் அந்த அணி இருக்கிறது. நெஹல் வதேரா, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, பிரியன்ஷ் ஆா்யா, பிரப்சிம்ரன் சிங், கிளென் மேக்ஸ்வெல் என ஆட்டத்துக்கு ஒருவராக அணியின் ஸ்கோருக்கு பங்களிப்பு செய்திருக்கின்றனா்.

பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் எதிரணி பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தலாக இருக்க, லாக்கி ஃபொ்குசன், மாா்கோ யான்சென் ஆகியோா் துணை நிற்கின்றனா். யுஜவேந்திர சஹல் இந்த ஆட்டத்தில் முத்திரை பதிப்பாா் என எதிா்பாா்க்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments