தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன்’ ஆகிய வெற்றி படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கதில் சமீபத்தில் வெளியான படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படம் திரையரங்கை விட ஓ.டி.டி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சீனு ராமசாமி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘இடி முழக்கம்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. சீனு ராமசாமி இயக்கும் முதல் ஆக்சன்/சஸ்பென்ஸ் படமாக இது இருக்கும். இப்படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
ஜி.வி.பிரகாஷின் ‘இடி முழக்கம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on