Monday, April 7, 2025
spot_img
Homeஇலங்கை செய்திகள்மட்டக்களப்பில் நீண்ட காலமாக நிலவிய மட்டக்களப்பு புதூர் வீதிக்கு தீர்வாக புதிய வீதி

மட்டக்களப்பில் நீண்ட காலமாக நிலவிய மட்டக்களப்பு புதூர் வீதிக்கு தீர்வாக புதிய வீதி

விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு–

மட்டக்களப்பிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று சனிக்கிழமை (05) மட்டு விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து புதூர் பகுதியை இணைக்கும் வீதியை விமானப்படைக்கான காணியின் ஊடாக புதிய வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு 05-04-2025 அன்று காலை 9.00 மணிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி சரத் பண்டார, தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட தலைவி வனிதா செல்லப் பெருமாள் உள்ளிட்டோருடன் மட்டக்களப்பு விமான நிலையத்தின் செயற்பாடுகள் மற்றும் மட்டக்களப்பு நகருடன் புதூர் பகுதியை இணைக்கும் பாதை தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.;

இதனை தொடர்ந்து நீண்டகாலமாக நிலவிவந்த மட்டக்களப்பு புதூர் இணைக்கும் வீதி பிரச்சனைக்கு தீர்வாக விமானப்படையின் காணி ஊடாக புதிய வீதியை புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்திற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை பார்வையிட பிரதியமைச்சர் புகையிரத நிலையத்தில் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்ந்ததுடன், இங்கு நிலவும் குறைபாடுகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதாக வாக்குறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments