மதுரை மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆட்டோவின் பின்னால் மோதியது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 4 பேரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.