2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கில் நடித்த ‘புஷ்பா’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியதுடன் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார். பட வாய்ப்புகளும் குவிந்தன. தமிழில் கார்த்தி ஜோடியாக ‘சுல்தான்’, விஜய்யுடன் ‘வாரிசு’ படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தனுசுடன் ‘குபேரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் நடித்த ‘அனிமல்’, ‘சாவா’ பட ங்களும் பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஷ்மிகா வைத்துள்ள சொத்துக்கள் விவரம் பற்றிய தகவல் இணையதளத்தில் பரவி வருகிறது. அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.100 கோடியை எட்டும் நிலையில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஷ்மிகா மந்தனா சினிமாவை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும், பல வர்த்தக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்தும் சம்பாதிக்கிறார். பெங்களூருவில் ரூ.8 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா வீடு உள்ளது. நிறைய விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்துள்ளார். மும்பை, கோவா, கூர்க், ஐதராபாத் பகுதிகளிலும் அவருக்கு நிறைய சொத்துக்கள் உள்ளனவாம்.
நடிகை ராஷ்மிகாவுக்கு ரூ.100 கோடி சொத்து?
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on