ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கீரிப்பூனை ஜோடி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வன விலங்குகள் சில கொண்டுவரப்பட்டன.
இந்த வன விலங்குகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்களால் சுமார் ஒரு மாத காலமாக பரிசோதனைக்குட்படுத்தட்ட நிலையில் அவற்றில் இருந்த கீரிப்பூனை ஜோடி ஒன்று தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
2 முதல் 6 வயது மதிக்கத்தக்க கீரிப்பூனை ஜோடி ஒன்றே இவ்வாறு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Meerkat எனப்படும் இந்த கீரிப்பூனைகள் 15 வருடங்கள் உயிர் வாழும் என கூறப்படுகின்றது.
இந்த கீரிப்பூனைகள் தென் ஆபிரிக்கா, போட்ஸ்வானா, நமீபியா ஆகிய நாடுகளில் பெரும்பாலும் காணப்படும்.