Sunday, March 15, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பூஜையுடன் தொடங்கியது சர்தார் 2 பட டப்பிங் பணிகள்!

பூஜையுடன் தொடங்கியது சர்தார் 2 பட டப்பிங் பணிகள்!

கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் சர்தார். பி.எஸ். மித்ரன் இயக்கிய இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து பி.எஸ். மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சர்தார் 2 பட டப்பிங் பணிகள் பூஜையுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

எனவே, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments