Friday, October 23, 2026
spot_img
Homeகனடா செய்திகள்வாக்குகள் வித்தியாசத்தில் Parti Québécois வெற்றி

வாக்குகள் வித்தியாசத்தில் Parti Québécois வெற்றி

கியூபெக் மாகாணத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வச்சோன் (Vachon) தொகுதிக்கான மறுஎண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் Parti Québécois கட்சி வேட்பாளர் ஸ்டீபன் போகைங் (Stephan Fogaing) 3 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றியைப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கியூபெக் லிபரல் கட்சியின் வேட்பாளர் அஃபின் லவாலிகா (Affine Lwalalika) 10,063 வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்தொகுதியில் போட்டியிட்ட Parti Québécois கட்சி வேட்பாளர் ஸ்டீபன் போகைங்கை விட வெறும் 10 வாக்குகளை அதிகமாகப் பெற்றதால், கியூபெக் லிபரல் கட்சியின் வேட்பாளருக்கு வெற்றி கிட்டியதாக, அறிவிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில், அதிருப்தியடைந்த Parti Québécois கட்சி நீதிமன்றமூடான வாக்கு மறுஎண்ணிக்கைக்கு விண்ணப்பித்திருந்தது.

அதன்படி லோங்குயீல் (Longueuil) நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கு மறுஎண்ணிக்கை நடவடிக்கையின் முடிவுகளின்படி, வச்சோன் (Vachon) தொகுதியில் Parti Québécois கட்சி வெற்றியைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Parti Québécois கட்சி வேட்பாளர் ஸ்டீபன் போகைங் இந்தத் தொகுதியில் 10,023 வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments