Saturday, November 28, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஒன்டாரியோவில் வீடற்ற மக்களுக்கு 50 புதிய வீடுகள் – டர்ஹாம் பிராந்தியத்தில் புதிய திட்டம் !

ஒன்டாரியோவில் வீடற்ற மக்களுக்கு 50 புதிய வீடுகள் – டர்ஹாம் பிராந்தியத்தில் புதிய திட்டம் !

ஒன்டாரியோ மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில், டர்ஹாம் பிராந்தியத்தின் போமன்வில்லில் 50 தனிப்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட புதிய குடில் சமூகத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

‘கிளாரிங்டன் கேபின்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், டர்ஹாம் பிராந்தியத்தில் முதன்முறையாக முன்னெடுக்கப்படும் முயற்சியாகும். 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்படவுள்ள இந்தக் குடியிருப்பில், 24 மணி நேர ஆதரவு சேவைகளும், உணவறை, குளியலறை, சலவை வசதி மற்றும் மனநல ஆலோசனை உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படவுள்ளன.

குடியிருப்பாளர்கள் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை தங்க முடியும் என்பதுடன், நீண்டகால வீட்டு வசதிக்கு அவர்களை மாற்றுவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பில்ட் ஃபார் ஸீரோ கனடா அமைப்பின் செப்டம்பர் மாத அறிக்கையின்படி, டர்ஹாம் பிராந்தியத்தில் குறைந்தது 1,970 பேர் வீடற்ற நிலையில் உள்ளனர்.

இந்தத் திட்டத்திற்காக தனியார் கட்டுமான நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு நிலத்தை வழங்கியுள்ளதுடன், டர்ஹாம் பிராந்தியம் முதல் ஆண்டுக்கான செயல்பாட்டு நிதியையும் வழங்கவுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து டர்ஹாம் பிராந்தியத்தில் நான்கு புதிய குடில் சமூகங்களை உருவாக்கவும், ஒன்டாரியோவின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments