Friday, November 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்குவைத் தாக்குதல் விவகாரம் - ஈரான் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு!

குவைத் தாக்குதல் விவகாரம் – ஈரான் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு!

குவைத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இத்தாலிய நாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு குவைத் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஈரான் மீது குற்றம் சாட்டியுள்ளன.

உயிரிழந்த இருவரும் ஜெர்மனியின் ஆயுதத் தயாரிப்பு நிறுவனமான ரைன்மெட்டாலில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் என இத்தாலி வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்க மறுத்துள்ளது. தமது இராணுவம் எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என ஈரான் ஆயுதப்படைகளின் பேச்சாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி தெரிவித்துள்ளார்.

இது சந்தேகத்திற்குரிய, போலித் தாக்குதலாக இருக்கலாம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குவைத் மற்றும் இத்தாலியுடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments