Friday, November 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடா விமான நிலையத்தில் 15 கிலோ போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர்

கனடா விமான நிலையத்தில் 15 கிலோ போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர்

கனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் ஊடாக நியூசிலாந்திற்கு 15 கிலோகிராம் ‘மெத்தம்பேட்டமைன்’ போதைப்பொருளைக் கடத்த முயன்ற ஒன்ராறியோ மாகாணத்தைச் சேர்ந்த இளைஞருக்கு, பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 29 ஆம் திகதி, வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் கனடா எல்லைச் சேவைகள் முகவர் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, 29 வயதான ஜோசுவா பிரையன்ட் என்பவரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரோயல் கனேடிய மவுண்டட் பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ரிச்மண்ட் மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜோசுவா பிரையன்ட், தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை ஏற்றுமதி செய்ய முயன்றமை மற்றும் கடத்தும் நோக்கில் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, கடந்த நவம்பர் 20 ஆம் திகதி அவருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆண்டுகள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான தடையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments