Friday, November 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி!

கியூபெக் மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி!

கியூபெக் (Québec) மாகாணத்தின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), கடந்த ஓகஸ்ட் மாதத்தில் முந்தைய ஜூலை மாதத்தை விட 0.1 சதவீதம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் இந்தத் தகவலைத் தெரிவிக்கின்றன.

பொருட்கள் உற்பத்தித் துறைகளில் வளர்ச்சி பதிவான போதிலும், சேவைத் துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைப் பின்னோக்கி இழுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கியூபெக்கின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 0.4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

இது நாட்டின் ஒட்டுமொத்த 1.2 சதவீத வளர்ச்சியை விடக் குறைவானதாகும்.

இதேவேளை, கியூபெக் மாகாணத்தின் சேவைத் துறைகளின் உற்பத்தி ஓகஸ்ட் மாதத்தில் 0.2 சதவீதத்தால் குறைந்துள்ளது. மொத்த விற்பனை வர்த்தகத்தில் ஏற்பட்ட 1.8 சதவீத வீழ்ச்சியும், பொது நிர்வாகத் துறையில் ஏற்பட்ட 0.8 சதவீதக் குறைவும் சேவைத் துறைகளின் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை, கியூபெக் மாகாணத்தில் சில்லறை விற்பனை வர்த்தகம் 0.7 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments