Wednesday, November 25, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்திய தொழிலதிபர்களுக்கு விசா: சீனா இணக்கம்!

இந்திய தொழிலதிபர்களுக்கு விசா: சீனா இணக்கம்!

இந்திய மற்றும் சீன தொழிலதிபர்களுக்கு விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா – சீனா உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, இராஜதந்திர மற்றும் இராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியர்களுக்கான குறிப்பாகத் தொழில் தொடர்பான விசாக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதற்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், தகுதியான வெளிநாட்டினருக்கு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விசா வழங்கப்படுவதாகவும், இந்தியா மற்றும் சீன தொழிலதிபர்களுக்கான விசா நடைமுறைகளை எளிதாக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments